அமைப்பானது மக்களுக்காக துணை நிற்கும், பிஏசிஎல் பணம் செலுத்திய கடைசி மனிதனுக்கு பணம் பெற்று தரும் வரை உங்களுக்காக போராடும் என்று கூறி அவர்.....
அவர் வெளியிட்டிருக்கின்ற PACL வீடியோ அறிக்கையில் பல முக்கியமான தகவல்களை மக்கள் முன் வைத்திருக்கிறார்.
நாங்கள் போராடுவது எங்கள் அமைப்புக்கு ஒத்துழைப்பு கொடுப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கும் அனைத்து பிஏசிஎல் வாடிக்கையாளர்களுக்கும் சேர்த்துதான் என்று அவர் உரையை தொடங்க ஆரம்பித்தார்.
ஜன்லோக் அமைப்பு பணம் வாங்கி தருவதாக
ஆம், ஆஸ்திரேலியா சொத்துக்களை விற்று வந்த பணத்தின் மூலம் சிபி என்ன செய்தது என்று பற்றிய பல முக்கிய தகவல்களை அவர் படமாக்கி இருக்கிறார்.
பிஏசிஎல் பணத்திற்கான ஆவணங்களை ஜன்லோக் அமைப்பு வசூல் செய்கிறது பணம் வாங்கி தருவதாக, அதைப் பற்றி பார்க்கும் முன் அந்த இயக்கத்தின் தலைவரான சுனந்தா அவர்கள் என்ன கூறியிருக்கிறார் என்று முதலில் பார்ப்போம்.
முதலில் அவர் கூறியது, ஆஸ்திரேலியா PACL சொத்துக்களை ஜன்லோக் அமைப்பு போராடி மீட்ட பிறகு, அந்தப் பணத்தைக் கொண்டுதான் சிபி தற்போது மக்களுக்கு 5,000 முதல் 7,000 வரை பணத்தை வழங்கிக் கொண்டு இருக்கிறது, இதற்கு முக்கிய காரணம் எங்கள் அமைப்பு தான் என்று கூறினார்.
நாங்கள் மக்களின் ஆவணங்களை ஏற்க காரணம் என்னவென்பதையும் அவர் தொடர்ந்து பேச துவங்கினார்.
அது ஒரிஜினல் ஆவணங்கள் இருப்பவர்களுக்கு மட்டுமே பணம் கிடைக்கும் என்று சிபியின் அறிவிப்பை நாங்கள் எதிர்க்கிறோம்.
உதாரணமாக ஆவணங்கள் இல்லாதவர்கள், பெயர் மாற்றப்பட்ட அவர்கள், திருமணமானவர்கள், இறந்தவர்கள் என்ற பல வகையில் பாதிக்கப்பட்டோர் இந்த நிறுவனத்தில் உள்ளனர்.
ஆவணங்களை ஒப்படைக்கலாமா வேண்டாமா
அவர்களை கருத்தில் கொண்டு நாங்கள் இதை செய்து வருகிறோம், இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி உங்களுக்கு எங்களால் உதவ முடியும் என்று அவர் தொடர்ந்து பேசத் துவங்கினார்.
பிஏசிஎல் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஜன்லோக் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா வேண்டாமா என்ற மக்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்த சுனந்தா அவர்கள், இந்த மாதத்தோடு ஐந்து வருடங்கள் முடிவடைகின்றன எங்கள் அமைப்பிற்கு.
இந்த ஐந்து வருடங்களாக PACL ளுக்காக மட்டுமே தொடர்ந்து போராடி வருகிறது, சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் மூலம் இதற்காக பல கேள்விகளை எழுப்பி வருகிறது எங்கள் அமைப்பு என்றார்.
ஆவணங்கள் எதற்காக
தொடர்ந்து பேசிய அவர், மக்களின் பலவிதமான பிரச்சினையை கருத்தில் கொள்ளாமல் சிபி ஒரிஜினல் ஆவணங்கள் இருப்பவர்களுக்கு மட்டுமே பணம் தர முடியும் என்ற வகையில் அறிவித்துள்ள இந்த அறிவிப்பை எதிர்த்து, நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் உங்களுக்காக வாதாட எங்களுக்கு ஒரு சில ஆதாரங்கள் தேவைப்படுகின்றன என்றார்.
மக்களுக்காக நாங்கள் பிஏசிஎல் சம்பந்தமாக பல வழக்குகளை இந்த 5 ஆண்டில் சந்தித்திருக்கிறோம், இருப்பினும் மக்கள் படும் அவதியை நாங்கள் வார்த்தைகளில் மட்டுமே கூறியிருக்கிறோம்.
ஆனால் இந்த முறை அனைத்து ஆவணங்களையும் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கும் போது, மக்களின் அவலநிலை மிகச்சுலபமாக புரிய வரும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
காரணமாகவே ஆவணங்களை கேட்கிறோம்
அதாவது பெயர் மாற்றம், தொலைந்து போன ஆவணங்கள், இறந்து போனவர்களின் பணம், போன்ற விஷயங்கள் என பல உள்ளன ஆனால் சரியான கணக்கு எத்தனை என்பதை இதுவரை சுப்ரீம் கோர்ட்டுக்கு யாரும் சமர்ப்பிக்கவில்லை.
எனவே இத்தனை மக்கள் இருக்கின்றனர், எத்தனை விதமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர், இவர்களுக்கு பணம் எப்படி போய் சேரும் என்ற முழு தகவலையும் சேகரித்து எங்கள் அமைப்பின் மூலம் நாங்கள் ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறோம்.
இதன் காரணமாகவே மக்களிடம் பிஏசிஎல் சம்பந்தப்பட்ட ஆவணங்களை நாங்கள் கேட்கிறோம்.
ஏனெனில் தற்போது மக்களுக்கு வழங்கப்படும் தொகை மிகக் குறைவானதே, இதைவிட அதிக தொகை மக்களுக்கு வழங்க வேண்டியது இருக்கிறது. அதை பற்றிய தகவல் அனைத்தையும் சேகரித்து சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் சமர்ப்பிக்கும் போது பல நல்ல விஷயங்கள் நடக்கும் என கருதுகிறோம் என்றார்.
இதைத் தொடர்ந்து நிறைய விஷயத்தில் சிபி மௌனம் சாதிப்பது, நாம் சுப்ரீம் கோர்ட்டில் வாதாட வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது என்று குறிப்பிட்ட அவர் இதற்கு அவர் மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கடைசி மனிதனுக்கு பணம் பெற்று தரும் வரை
இதற்கான அப்ளிகேஷன் கூகிள் பிளேஸ்டோரில் JANLOCK PACL TADA என்று இருப்பதாகவும் அதன் மூலம் உங்களுடைய தகவல்களை நீங்கள் பதிவேற்றம் என்றும் அவர் கூறினார்.
மேலும் எப்போதுமே ஜன்லோக் அமைப்பானது மக்களுக்காக துணை நிற்கும், பிஏசிஎல் பணம் செலுத்திய கடைசி மனிதனுக்கு பணம் பெற்று தரும் வரை உங்களுக்காக போராடும் என்று கூறி அவர் உரையை முடித்தார்.
COMMENTS